bloggers hai

Ashokha - Find me on Bloggers.com

you are

visitor

.


Wednesday, January 23, 2013

kandanur palaiyur mahalakshmi



Palaiyur Shri Mahalakshmi Temple
Palaiyur, a developing village situated very close to Karaikudi city in South Tamilnadu, is proud to have an exclusive temple for Goddess Shri Mahalakshmi. Nattukottai Nagarathar alias Chettiars community who are the residents of Palaiyur were persuaded by Kanchi Mutt Shri Shri Chandrasekara Swamigal to construct an exclusive temple for Goddess Shri Mahalaskhmi in Palaiyur itself. Accordingly, the temple was constructed in 2000 and had a dip of holy water ('kumbabhishekam')
'Kanagadhara Sthothram' a sonnet recited by Shri Aadhi Sankarar depicts Shri Mahalakshmi'ssupremacy which poured golden amla over a poor's house. Here Goddess Shri Mahalakshmi who is in the sanctum sanctorum bless the devotees to lead a happy life by getting rid from obstacle in marriage, child issues, financial burden, employment etc.,
ContactShri Mahalakshmi Temple
Palaiyur, Kandanur 630 104
Sivagangai Dist (Tamil Nadu)
Mobile Ph: 9677922622
How to ReachCan reach Karaikudi by train from all parts of the country.
Excellent lodges available in Karaikudi.
Road MapFrom Karaikudi to Arantangi bus route, Palaiyur is
situated on 10 th KM. Ask ticket for 'Panickar Hotel'
and alight there. Temple is walk able distance from that spot.
Autos available from Karaikudi.
Temples in VicinityKundrakudi, Pillyarpatti, Ariyakudi (Vishnu Temple)
Koppudaiyamman (Karaikudi), Avudarkoil (Manickavasagar
staged Devaram here)


பாலையூர் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்
கலைநயம் மிகுந்த கட்டிடங்கள்; நாவிற்கினிய அறுசுவை; அறம் வளர்த்த ஆன்மீக பெரியவர்கள்; முத்திரை பதித்த தொழிலதிபர்கள்; அறிவு கண் திறக்கும் கல்வி கூடங்கள் என்று திக்கெட்டும் புகழ் பரப்பும் செட்டிநாட்டு மண்ணில், பாலையூர் என்ற ஸ்தலத்தில், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனின் இதயத்தில் குடி அமர்ந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி தாயாருக்கென்றே பிரத்யேக கோவில் அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி செல்லும் பேருந்து மார்க்கத்தில் 10 கி.மி தொலைவில் உள்ள பாலையூர் என்ற ஊரில் வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்கள், காலம் சென்ற காஞ்சி பெரியவர்கள் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் அறிவுரைப்படி இந்த ஊரின் நடுவில் உள்ள ஊரணி கரையோரம் ஸ்ரீ மகாலட்சுமியை மூலவராக பிரதிஷ்டை செய்து இவ்வாலயத்தை 2000ம் வருடம் நிர்மாணித்து இறையருளால் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இந்த ஸ்தலம் வளம் கொண்டு விளங்குகிறது.
ஆலயத்தின் மூலவராக வீற்றிருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் அருள் சுரக்கும் விழிகளால் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வழங்கி வருகிறாள். ”சந்திர பிறை பூங் கண்ணி! சற்று நீ திரும்பி பார்த்தால் மேவிய வறுமை தீர்ப்பேன்” என்று ஆதி சங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்ரத்தை ஏற்று அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை பொழிய விட்ட கருணையின் வடிவமல்லவா இந்த தாயார்! திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, கடன் நிவர்த்தி என்று பல்வேறு பாக்கியங்களை அருளி இல்லத்தில் லட்சுமி கடாட்சத்தை வழங்கும் இந்த அலைமகளின் ஆலயத்தில் அன்றாட வழிபாடுகளுடன் விசேஷ அபிஷேகங்களும் நடைபெறுகிறது.
ஆலய முகவரிஅருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்
பாலையூர், கண்டனூர 630 104
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
அலைபேசி 9677922622.
பயணிக்கும் வழிகாரைக்குடி - அறந்தாங்கி பேருந்து
மார்க்கத்தில் 10வது கி.மி தொலைவில் உள்ள
பாலையூர் பணிக்கர் ஹோட்டல் பஸ்
நிறுத்தத்தில் இறங்கி வரவும்.
அருகிலுள்ள மற்ற ஸ்தலங்கள். 
குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, கொப்புடையம்மன் (காரைக்குடி)
அரியக்குடி (தென் திருப்பதி), ஆவுடையார் கோவில் (மாணிக்க வாசகர் தேவாரம் பாடிய ஸ்தலம்)
கருத்தாக்கம் மற்றும் உபயம் - ராம.சுப.முருகப்பன் , பாலையூர்

visit this site and get a detailed report

No comments: