bloggers hai

Ashokha - Find me on Bloggers.com

you are

visitor

.


Monday, January 21, 2013

panankattur

to see picture click here திருப்புறவார்பனங்காட்டூர் இறைவர் திருப்பெயர் : பனங்காட்டீசர் இறைவியார் திருப்பெயர் : புறவம்மை, சத்யாம்பிகை தல மரம் : பனை தீர்த்தம் : பத்ம தீர்த்தம் வழிபட்டோர் : சூரியன், சிபிச்சக்கரவர்த்தி தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - விண்ணமர்ந்தன மும்மதில். தல வரலாறு இது, பனை மரத்தைத் தலமரமாகக் கொண்டதாலும், சிபிச் சக்கரவர்த்தி (புறாவின் பொருட்டு தன் தசையை அரிந்தவர்) வழிபட்டதாலும்(புறவார்), இப் பெயர் பெற்றது. சூரியன், பூசித்துப் பேறுபெற்றத் தலம். சிறப்புக்கள் சித்திரை மாதம்,முதல் ஏழு நாட்களில், சூரியனுடைய கிரணங்கள் சுவாமியின் மீதும், அம்பிகையின் மீதும் பதிகின்றது. சோழர் காலக் கல்வெட்டுகள் மூன்று படி எடுக்கப்பட்டுள்ளன. to see some more photos click here panankatteeswarar அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு வடக்கேயுள்ள முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 2-கி. மீ. தூரத்தில் உள்ளது. விழுப்புரம் - பாண்டிச்சேரி (திருக்கனூர் - வழி) செல்லும் பஸ்களில் இக்கோவிலை அடையலாம். பனையபுரம் என வழங்கப்படுகின்றது.

No comments: